சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை திட்டங்கள்
புத்த, கிறிஸ்தவ, ஜெயின், முஸ்லிம், பார்சி மற்றும் சீக்கிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவித் தொகை திட்டங்களை மத்திய அரசு வழங்குகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நவ்வி எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:
புத்த, கிறிஸ்தவ, ஜெயின், முஸ்லிம், பார்சி மற்றும் சீக்கிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு கீழ்கண்ட உதவித் தொகை திட்டங்களை மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் அமல்படுத்துகிறது.
1. 10ம் வகுப்புக்கு முந்தைய கல்வி உதவித் தொகை: பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு முந்தைய வகுப்புகளில் மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும்.
2. 10ம் வகுப்புக்கு பிந்தைய கல்வி உதவித் தொகை திட்டம்( 11ம் வகுப்பு முதல் பி.எச்.டி வரை) பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் மிகாமல் இருந்து,முந்தைய வகுப்புகளில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
3. தொழில்நுட்ப மற்றும் தொழில் கவ்வி படிப்பவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம்: பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருந்து, முந்தைய வகுப்புகளில் 50 சதவீத மதிப்பெண் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
4. 11ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவிகளுக்கான பேகம் ஹஸ்ரத் மகல் தேசிய கல்விஉதவித் தொகை திட்டம்: பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருந்து, முந்தைய வகுப்புகளில் 50 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவிகள் இந்த கல்வி உதவித் தொகை பெற தகுதியுடைவர்கள் ஆவர்.
கடந்த 2016-17ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை 3,08,57, 958 கல்வி உதவித் தொகை ரூ. 9,904.06 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளன. அதன் அதன் விபரங்கள் :