சமோசா விற்று தினமும் ரூ. 12 லட்சம் வருமானம்: அசத்தும் பெங்களூர் தம்பதியினர்

பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் சமோசா விற்பனை மூலம் தினமும் ரூ.12 லட்சம் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.;

Update: 2023-03-15 16:30 GMT

சமோசா விற்பனை செய்யும் தம்பதியினர்.

சமீப காலமாக நிறைய இளம் தலைமுறையினர் புதிது புதிதாக ஸ்டார்ட் அப் ஐடியாக்களை செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்கள் தங்களது வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் தொடங்குகின்றனர். இதேபோல தங்களது அதிக ஊதியம் பெறும் வேலையை விடுத்து பெங்களூரை சேர்ந்த தம்பதிகள் புதிய தொழிலை தொடங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர்.

ஹரியானாவில் பிடெக் பிரிவில் பயோடெக்னாலஜி படிப்பை முடித்தவர் ஷிகர் வீர் சிங். இவர் ஹைதராபாத்தில் உள்ள இன்ஸ்ட்டியூட் ஆப் லைப் சயின்சஸில் எம்டெக் படிப்பை முடித்தார். ஷிகர் வீர் சிங்கின் மனைவி பெயர் நிதி சிங். ஹரியானாவில் படித்தபோது ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.


ஷிகர் வீர் சிங் பயோகான் நிறுவனத்தில் முதன்மை சயிண்டிஸ்ட்டாக பணியாற்றினார். நிதி சிங்கும் பிரபல மருந்து நிறுவனத்தில் பணியில் இருந்தார். இருவரும் அதிக சம்பளத்தில் பணியில் இருந்தனர். ஆனால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற முடிவில் இருவரும் தங்களது வேலையை விட்டனர். பிறகு 2016ம் ஆண்டு சமோசா சிங் எனும் பெயரில் கடையை திறந்துள்ளனர். பிறகு வெரைட்டியான சமோசாக்களை தயாரித்து வாடிக்கையாளர்களை கவர்ந்தனர்.

தற்போது ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் சமோசாக்களை விற்பனை செய்கிறார்கள். இதன்மூலம் அவர்களுக்கு 45 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகின்றனர். அதன்படி பார்த்தார் அவர்களின் ஒருநாள் வருமானம் ரூ.12 லட்சமாக உள்ளது.

Tags:    

Similar News