நவ. 16ல் சபரிமலை நடை திறப்பு: பக்தர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்

மண்டல மற்றும் மகர ஜோதி பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-08 01:30 GMT

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலையில், மண்டல மற்றும் மகர ஜோதி பூஜைகள் பிரதிபெற்றவை. இந்த ஆண்டுக்கான பூஜைகளுக்கு, கோவில் நடை திறப்பு தேதி குறித்து, திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூயிருப்பதாவது:

மண்டல மற்றும் மகர ஜோதி பூஜைகளுக்காக, சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவில் நடை, நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படுகிறது. அடுத்த நாள், 17-ம் தேதி முதல், தினமும் 25 ஆயிரம் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். பின்னர், படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

கோவிட் கட்டுப்பாடுகள்

சபரிமலைக்கு வரும் பக்தர்கள், 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக, உடன் எடுத்து வர வேண்டும். அது இல்லாதபட்சத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை. பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் பரிசோதனை, நிலக்கல்லில் நடைபெறும் என்று, தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News