பங்குனி உத்திர ஆராட்டு விழா: சபரிமலை கோவில் நடை திறப்பு
பங்குனி உத்திர ஆராட்டு விழாவிற்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.;
பங்குனி உத்திரம் மற்றும் ஆராட்டு விழாவிற்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்ட நிலையில் இன்று தங்கக்கொடி மரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.
இன்று காலை 10:30 முதல் காலை 11:30 மணிவரை நடைபெற்ற இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க கலந்து கொண்டனர். கொடியேற்றத்துக்கு முன்னோடியான பிரகார சுத்திகிரியைகள் பூஜைகள் நேற்று இரவு நடத்தப்பட்டது.
தொடர்ந்து தினமும் ஸ்ரீபூதபலி, உற்சவபலி யானை மீது சுவாமி எழுந்தருளல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்.
மார்ச் 17ல் சரங்குத்தியில் பள்ளி வேட்டையும், மார்ச் 18 ல் பம்பையில் ஆராட்டும் நடக்கும், ஆராட்டு முடிந்து இரவு சுவாமி சன்னிதானம் திரும்பியதும் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும்.