சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.

Update: 2022-02-12 15:30 GMT

கேரளா மாநிலம் பத்தனந்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சர்வதேச புகழ்பெற்ற ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜையும் அதனை தொடர்ந்து மகரவிளக்கு பூஜையும் நிறைவு பெற்று நடை அடைக்கப்பட்டது.

இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நாளை முதல் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

மாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில் இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

நாளை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும்.

வரும் 17ம் தேதி வரை தினமும் நெய்யபிஷேகம், படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Tags:    

Similar News