ரூ. 7,374 கோடி கடனை திருப்பி செலுத்திய அதானி

சுமார் 7,374 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு அடிப்படையிலான கடன்களை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தியுள்ளாதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

Update: 2023-03-07 17:15 GMT

அதானி (பைல் படம்)

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. இதைத்தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் மிக கடுமையாக சரிந்தன. அதானி குழுமம் பல்வேறு சவால்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறது. முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல்வேறு கடன்களை அடைத்து முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி அதானி குழுமம் முயற்சி செய்து வருகிறது. இதனிடையே வரும் ஏப்ரல் 2025 முதிர்வுத் தேதிக்கு முன், ரூ.7,374 கோடி ஈக்விட்டி-பேக்டட் ஃபைனான்சிங் நிலுவை தொகைகளை செலுத்தும் என்று அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவை ஜிகியூஜி பார்ட்னர்ஸ் நிறுவனம் அதானி குழுமத்தில் அண்மையில் 15,446 கோடி ரூபாய் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News