குலசேகரப்பட்டினத்தில் அமையும் 2-வது ராக்கெட் ஏவுதளம் - இஸ்ரோ சிவன் மகிழ்ச்சி

Update: 2022-03-26 08:51 GMT

சென்னையை அடுத்த ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம். அங்கு இருஏவுதளங்கள் இருக்கின்றன. எதிர்கால தேவை, செலவினம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரபட்டினத்தில் அமைக்க இந்தியஅரசு திட்டமிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு மிக அருகிலுள்ளது குலசேகரபட்டினம், ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவரான கே. சிவன் பேசியபோது, இவ்வாறு ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே அங்கு விரைவில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடியும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News