ஆக்ராவில் ரூ.30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

ஆக்ராவில் ரூ.30 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-08 09:27 GMT

கொள்ளை நடந்த ஏடிஎம்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ரா மாவட்டம் ககாரோல் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை இன்று அதிகாலை 3 மணியளவில் திருடர்கள் பிடுங்கி எடுத்துச் சென்றுள்ளனர். கடும் மூடுபனிக்கு மத்தியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஏ.டி.எம்., மற்றும் எஸ்.பி.ஐ., கிளை, கார்கரோல் டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகே வாடகை கட்டடத்தில் அமைந்துள்ளது.

திருடப்பட்ட ஏடிஎம்மில் சுமார் ரூ.30 லட்சம் பணம் இருந்ததாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ககரோல் கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.

ஆக்ரா காவல் ஆணையர் டாக்டர் ப்ரீத்திந்தர் சிங் கூறுகையில், ஆக்ரா மாவட்டம் ககாரோல் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். வங்கி கிளையை ஒட்டி, ஏ.டி.எம்., அறை இருந்தது. இன்றுஅதிகாலை 2.30 மணி முதல் 3 மணி வரை, நான்கைந்து பேர் பிக் அப் வேனுடன் வந்து ஏடிஎம் இயந்திரத்தை பிடுங்கி எடுத்துச் சென்றுள்ளனர்.

ஸ்.பி.ஐ.,யின் ககரோல் கிளையில், 30 லட்சம் ரூபாய் ரொக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆக்ரா காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி) மற்றும் கண்காணிப்புக் குழு ஆகியவை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் ஆக்ரா காவல் ஆணையர் டாக்டர் ப்ரீத்திந்தர் சிங் நேரில் ஆய்வு செய்தார். மேலும் ககாரோல் காவல் நிலையத்தின் பொறுப்பாளர் ஜஸ்வீர் சிங் சிரோஹியை போலீஸ் லைன்ஸுக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மேலாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் சேகரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News