குறைந்தபட்ச ஊதியத் திருத்தம்: இணையமைச்சர் ராமேஷ்வர் தெலி தகவல்

Update: 2022-03-24 16:23 GMT

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் ராமேஷ்வர் தெலி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 மூன்றாவது பிரிவின் கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகள் குறைந்தபட்ச ஊதியத்தை அந்தந்த துறைகளில், இடத்திற்கு ஏற்ப, குறிப்பிட்ட கால இடைவெளியில், 5 ஆண்டுகளுக்கு மிகாமல் மாற்றியமைக்க வேண்டும். பல துறைகளில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் கடந்த 2017ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது. மேலும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, பலவித அகவிலைப்படிகளை நுகர்வோர் விலை குறையீடு அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்கிறது. பலவித அகவிலைப்படிகள் கடைசியாக கடந்த 2021 அக்டோபர் 1ம் தேதி மாற்றியமைக்கப்பட்டது என தெரிவித்தார்.

Tags:    

Similar News