வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடி விடுவிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது

Update: 2022-05-07 05:28 GMT

அதிகாரப் பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை 2-வது தவணையாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை நேற்று விடுவித்தது. 15-வது நிதி ஆணைய பரிந்துரைகளின்படி, இந்த மானியம் விடுவிக்கப்பட்டது.

2022-23-ம் நிதியாண்டிற்கு ஆந்திரப்பிரதேசம், அசாம், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு அதிகாரப்பகிர்வுக்கு பிந்தையை வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.86,201 கோடி விடுவிக்க 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்தது. இந்தத் தொகை சமமான 12 மாத தவணைகளில் விடுவிக்கப்படுகிறது. தற்போது விடுவிக்கப்பட்ட தொகையுடன் இதுவரை ரூ.14,366.84 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News