இந்தியாவில் இன்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது.;

Update: 2022-07-10 05:41 GMT

கடந்த 24 மணி நேரத்தில் 18,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 14. 533 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 198 கோடியே 76 லட்சத்து 59 ஆயிரத்து 299 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News