சகோதரத்துவம் வலியுறுத்தும் ரக்‌ஷா பந்தன் இன்று

சகோதரத்துவத்தை வலியுறுத்தி வடமாநிலங்களில் சகோதரர்களுக்கு, சகோதரிகள் ராக்கி கட்டி மகிழும் ரக்‌ஷா பந்தன் விழா இன்று நடக்கிறது.

Update: 2022-08-11 02:32 GMT

ரக்ஷா பந்தன் - கோப்புப்படம் 

ரக்‌ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌர்ணமி நாளிற் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பெண்கள் தமது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்ச்சி.

ரக்‌ஷா என்றால் புனித கயிறு, பந்தன் என்றால் பந்தம். இந்த புனித கயிறை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், அந்த அன்புச் சகோதரிக்கு ஒரு பரிசு (அல்லது பணம்) அளிப்பது வழக்கம். அடிப்படையில் இந்துக்களால் கொண்டாடப்படும் இப்பண்டிகையை மதப் பணடிகை என்பதை விட சமுதாயப் பண்டிகை என்று கூறுவது பொருந்தும்.

Full View

மரபு படி, சகோதரர்களின் கை மணிக்கட்டில் ராக்கி என்ற நூலை சகோதரிகள் கட்டுவார்கள். தீயவைகளில் இருந்து அவர்களை காக்கும் அடையாளத்தை அது குறிக்கும். அதற்கு கைமாறாக, அனைத்து விதமான துன்பங்களில் இருந்து தன் சகோதரியை காத்து அவர்களின் வாழ்நாள் முதுவதும் அவர்களை பார்த்து கொள்வதாக சகோதரர்கள் சத்தியம் செய்வார்கள்.

இதனுடன் பல புராணங்களும் வரலாறுகளும் இணைந்துள்ளது. ரத்த சம்பந்தம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும், ரக்‌ஷா பந்தன் என்பது முக்கிய நிகழ்வாக உள்ளது

Tags:    

Similar News