ரக்ஷா பந்தன் 2023: விடுமுறை தேதி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இந்த ஆண்டு ராக்கி பண்டிகை ஆகஸ்ட் 30ம் தேதியும், சில இடங்களில் ஆகஸ்ட் 31ம் தேதியும் கொண்டாடப்படுகிறது
ரக்ஷா பந்தன் பள்ளி விடுமுறை 2023: இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள் ரக்ஷா பந்தனுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இருப்பினும், சில பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 30ம் தேதியும், சில பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 31ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், இந்த ஆண்டு ராக்கி பண்டிகை 2023 இந்த நாட்களில் கொண்டாடப்படுகிறது.
பீகாரில் ரக்ஷா பந்தன் பள்ளிக்கு விடுமுறை:
பீகார் அரசு ஆகஸ்ட் 31-ம் தேதி ரக்ஷா பந்தன் விடுமுறையை அறிவித்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 30ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பீகாரில் பெரும்பாலான மாவட்டங்களில் ஆகஸ்ட் 31 அன்று ரக்ஷா பந்தன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் ஆகஸ்ட் 31 அன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்கண்ட்--ரக்ஷா பந்தன் விடுமுறை 2023
ஜார்கண்ட் அரசும் ரக்ஷா பந்தன் விடுமுறையை ஆகஸ்ட் 30ல் இருந்து ஆகஸ்ட் 31க்கு மாற்றியுள்ளது.
ராஜஸ்தான்--ரக்ஷா பந்தன் விடுமுறை 2023
ராஜஸ்தான் அரசு பள்ளி காலண்டர்களில் ஆகஸ்ட் 30 அன்று விடுமுறை அறிவித்திருந்தாலும், தேதியை ஆகஸ்ட் 31 ஆக மாற்றலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ரக்ஷா பந்தா பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்புகளை அந்தந்த பள்ளிகளில் இருந்து பெறுமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டெல்லி-ரக்ஷா பந்தன் பள்ளி விடுமுறை தேதி 2023
டெல்லியில், பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஆகஸ்ட் 31 அன்று விடுமுறை அறிவித்துள்ளன, ஆனால் இறுதி உத்தரவு குறித்து மாணவர்கள் தங்கள் பள்ளிகளுடன் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்
ரக்ஷா பந்தன் 2023--வங்கி விடுமுறை ஆகஸ்ட் 30 அல்லது ஆகஸ்ட் 31?
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை காலண்டரின் படி, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 31 அன்று, ரக்ஷா பந்தன் / ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி / பாங்-லாப்சோல் அன்று உத்தரகாண்டின் டேராடூன், சிக்கிமின் கேங்க்டாக், உத்தரபிரதேசத்தின் கான்பூர், லக்னோ, கேரளாவின் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
இந்த தேதிகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் போது, மொபைல் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் உள்ளிட்ட ஆன்லைன் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் செயல்படும்.