ராணுவத்திற்கான உதிரிபாகங்களை உள்நாட்டில் தயாரிக்க ஒப்புதல்

ராணுவத்திற்கான உதிரிபாகங்கள் தயாரிப்பில் 3வது உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல்

Update: 2022-08-28 12:47 GMT

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியத் தொழில்துறை அதிக பங்களிப்பை அளிக்கும் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிவுகளுக்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

டிசம்பர் 2023 முதல் டிசம்பர் 2028 வரையிலான காலக்கட்டத்தில், இந்த பொருட்களின் இறக்குமதி தடைக்கான குறிப்பிட்ட காலக்கெடுவை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து 3வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் சுமார் ஆறு வருட காலக் கெடுவின் கீழ் இந்திய தொழில்துறையினரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும். டிசம்பர் 2021 மற்றும் மார்ச் 2022-இல் வெளியிடப்பட்ட இரண்டு உள்நாட்டு உற்பத்தி பட்டியல்களின் தொடர்ச்சியாக தற்போது இந்த 3வது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல்களின்படி, 2500 பொருட்கள் ஏற்கனவே உள்ளூர்மயமாக்கப் பட்டுள்ளன. 458 பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உள்ளூர் மயமாக்கப்படும். அவற்றிலும் இதுவரை 167 பொருட்களை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News