நுபுர்சர்மாவை ஆதரித்த ராஜஸ்தான் தொழிலாளி தலை துண்டிப்பு: விசாரிக்கிறது என்.ஐ.ஏ..!

நுபுர்சர்மா கருத்தை ஆதரித்த ராஜஸ்தான் தொழிலாளியின் தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கிறது.

Update: 2022-06-29 08:18 GMT

சர்ச்சை கருத்து கூறி பரபரப்பு ஏற்படுத்திய நுபுர்சர்மா.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டம் மால்டா நகரில், ஜவுளிக்கடைக்குள் புகுந்து வாலிபர் ஒருவரை வலுக்கட்டாயமாக கும்பல் இழுத்துச்சென்றது. இதையடுத்து பொது இடத்தில் வைத்து அந்த வாலிபர் தலையை துண்டித்தனர். இந்த காட்சிகளை மொபைலில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

இதுதொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட இளைஞர் கன்னையா லால் என்பதும், அப்பகுதி ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த தையல் தொழிலாளி என்பதும், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு கருத்து வெளியிட்டதால், தலை துண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது.

மேலும் யாரேனும் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு அளித்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் என வீடியோவில் கொலையாளிகள் எச்சரித்து இருந்தனர். இதனால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதற்ற நிலை ஏற்பட்டது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் இதற்கு பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா? என தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News