ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ. 500 அபராதமாக வசூலிக்கப்படும் என இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டு, மீறுவோர்களிடம் அனைத்து மாநிலங்களிலும் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மாஸ்க் அணியாமல் இருந்தால் ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.