ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விட இந்திய ரெயில்வே திட்டம்

சுற்றுலாவின் பெயரால் ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விடவும், விற்கவும் ரெயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

Update: 2021-09-12 01:20 GMT

பைல் படம்

நமது நாட்டில் தனியார் துறையினரும் ரெயில்களை இயக்க ரெயில்வே துறை விரும்பினாலும், அதற்கு இந்திய பெருநிறுவனங்களிடம் மிகக்குறைந்த அளவுக்கே ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த அடியை எடுத்து வைக்க ரெயில்வே விரும்புகிறது. கலாசாரம், மதம் மற்றும் இன்ன பிற சுற்றுலா வகைக்கு ரெயில்களை தனியார் துறையினர் இயக்க ரெயில்வே துறை அதிரடியாக திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் துறையினருக்கு ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு விடவும், விற்பனை செய்யவும் பரிசீலிக்கப்படுகிறது.

இதுதொடர்பான கொள்கையையும், திட்டத்தின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் முடிவு செய்வதற்கு செயல் இயக்குனர் அளவிலான உயர்மட்டக்குழுவை ரெயில்வே அமைத்துள்ளது. இதை ரெயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ் செயல்பட விருப்பம் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 16 ரெயில்பெட்டிகளை வாங்கவோ, குத்தகைக்கு எடுக்கவோ வேண்டும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரெயில் பெட்டிகளை குத்தகைக்கு அல்லது விலைக்கு வாங்குகிறவர்கள் பயண வழிகள், பயணத்திட்டம், கட்டணம் போன்றவற்றை நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News