வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவரை சந்தித்த ராகுல் காந்தி: புதிய சர்ச்சை

வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவரை லண்டனில் ராகுல் காந்தி சந்தித்து பேசியதாக புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.;

Update: 2024-08-14 14:15 GMT

சர்ச்சைக்குரிய புகைப்படம்.

நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டம் கலவரத்தில் முடிந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். மாணவர்களுடன் அந்நாட்டின் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகளும் சேர்ந்து கொண்டு நடத்திய போராட்டம் அரசியலாக மாறியது.

பிரதமர்  ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டைவிட்டே வெளியேற வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கை வலுத்ததால்  ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்து உள்ளார்.

ஆனாலும் வங்காள தேசத்தில் இன்னும் அமைதி திரும்பவில்லை. அந்நாட்டின் சிறுபான்மை மக்களான இந்துக்களின் சொத்துகள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் வர்த்தக நிறுவனங்கள, வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டு வருகிறது. இந்து பெண்கள் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

இப்படி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபடும் அமைப்புகளில் ஒன்று தான் ஜமாத்-இ-இஸ்லாமி. இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர் நடீம் ஷா.இவர் இந்தியாவிற்கு எதிரான சிந்தனை கொண்டவர் என இந்திய உளவுத்துறையால் ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் லண்டனில் ஒரு ஒட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ,நடீம் ஷாவை சந்தித்து பேசியதாக செய்திகள் வந்துள்ளது.இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News