டிரிம் செய்யப்பட்ட தாடி, குட்டை முடி: ராகுல் காந்தியின் புதிய தோற்றம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரை வழங்குவதற்கு முன்னதாக, ராகுல் காந்தி தற்போது பிரபலமான தனது தாடியை ட்ரிம் செய்து, ஹேர்கட் செய்து கொண்டார்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரை ஆற்றுவதற்காக புதன்கிழமை இங்கிலாந்து சென்றடைந்தார். தனது இங்கிலாந்து பயணத்திற்கு முன்னதாகவே பாரத் ஜோடோ யாத்ரா முழுமைக்கும் போது அவர் வளர்த்த பிரபலமான தாடியை ட்ரிம் செய்து, ஹேர்கட் செய்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் '21ம் நூற்றாண்டில் கேட்க கற்றுக்கொள்வது' என்ற தலைப்பில் ராகுல் காந்தி ஒரு விசிட்டிங் ஃபெலோவாக விரிவுரை ஆற்றினார். விரிவுரையின் போது, ராகுல் பாரத் ஜோடோ யாத்ரா, இரண்டு மாறுபட்ட சித்தாந்தங்கள் மற்றும் உலகளாவிய பேச்சுவார்த்தைக்கான தேவை ஆகிய மூன்று தலைப்புகளில் கவனம் செலுத்தினார்
இங்கிலாந்தில் ஒரு வார கால சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் .மார்ச் 5-ம் தேதி லண்டனில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடுகிறார். லண்டனில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் (ஐஓசி) உறுப்பினர்களையும் அவர் சந்திக்கிறார். ஐஓசி என்பது காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுப் பிரிவாகும்.
வர்த்தக சமூக உறுப்பினர்களுடன் ராகுல் காந்தியும் தொடர் கலந்துரையாடல் நடத்த உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பாரத் ஜோடோ யாத்திரை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கப்பட்ட செப்டம்பர் 2022 முதல் ஜனவரி 30 அன்று ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் முடிவடையும் வரை ராகுல் காந்தியின் உருவம் வெகுவாக மாறியது.
ராகுல் காந்தியின் மாற்றத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அவர் சதாம் ஹுசைனைப் போல் இருப்பதாக கருத்து தெரிவித்தார் . இந்தக் கருத்துக்களுக்காக பாஜகவைத் தாக்கிய காங்கிரஸ், "உங்கள் தலைவர் (பிரதமர் மோடி) தாடி வளர்த்தபோது நாங்கள் எதுவும் சொல்லவில்லை" என்று கூறியது.