க்யு எஸ் சர்வதேச பல்கலை தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள்: பிரதமர் மோடி வாழ்த்து
க்யு எஸ் சர்வதேச பல்லைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.;
க்யு எஸ் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் இடம்பிடித்துள்ள ஐஐடி பம்பாய், ஐஐடி டில்லி மற்றும், ஐஐஎஸ்சி பெங்களூருவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"@iiscbangalore, @iitbombay மற்றும் @iitdelhi-க்கு வாழ்த்துகள். இந்தியாவில் உள்ள இன்னும் அதிக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சர்வதேச அளவில் சிறப்பான இடத்தை அடையவும், இளைஞர்களின் அறிவுசார் திறனை ஊக்குவிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன," என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.