பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை!
பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவரும் பாடகருமான சித்து மூஸ்வாலா சுட்டுக்கொல்லப்பட்டார்.
பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஜஹவர்கே கிராமத்தில் பாடகரும், காங்கிரஸ் தலைவருமான சித்து மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பயணித்த ஜீப் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் இருவர் காயமடைந்தனர். அவர்கள் மான்சா மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூஸ் வாலா உட்பட 424 நபர்களுக்கான பாதுகாப்பை பஞ்சாப் அரசு விலக்கிக் கொண்ட ஒரே நாளிலேயே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் மான்சா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் விஜய் சிங்லாவிடம் மூஸ் வாலா தோல்வியடைந்தார்.