ஃபிக்சட் டெப்பாசிட்களுக்கு வட்டியை உயர்த்தியது பஞ்சாப் நேஷனல் வங்கி

ஃபிக்சட் டெப்பாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.;

Update: 2022-05-08 08:52 GMT

ஆர்பிஐ தனது ரெப்போ வட்டி விகிதத்தில் 0.40 விழுக்காடு உயர்த்தியதையடுத்தி, பல வங்கி நிறுவனங்கள் வட்டியில் மாற்றம் கொண்டு வருகின்றன. அந்தவகையில் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஃபிக்சட் டெப்பாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.60 சதவீதம் வரை உயர்த்தியது. இந்த புதிய வட்டி விகிதம், நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சமாக 3% வட்டி வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 5.25% வட்டி வழங்கப்படுகிறது. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி மாற்றப்பட்டுள்ளது.

பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் அனைத்து திட்டங்களிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 0.50% அதிக வட்டி வழங்கப்படுகிறது. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கான ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதம் (RLLR) ஜூன் 1 முதல் 6.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.

Tags:    

Similar News