பிரகாஷ் சிங் பாதல் மறைவு: பஞ்சாபில் நாளை அரசு விடுமுறை

மறைந்த முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பஞ்சாபில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் நாளை மூடப்படும்.

Update: 2023-04-26 06:31 GMT

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்

ஏப்ரல் 25-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் நினைவாக பஞ்சாப் அரசு வியாழக்கிழமை பொது விடுமுறை அறிவித்துள்ளது .ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் பாதல், தனது 95வது வயதில் காலமானார். அவர் சில காலமாக பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு, மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்திருந்தார்.

அவரது மறைவையொட்டி பஞ்சாப் அரசு வியாழன் அன்று ஒரு நாள் அரசு துக்கத்தை அறிவித்துள்ளது, மேலும் மாநிலத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மூடப்பட்டிருக்கும்.

பிரகாஷ் சிங் பாதலின் இறுதிச் சடங்குகள் முக்த்சார் மாவட்டத்தில் உள்ள அவரது பூர்வீக கிராமமான பாதலில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இறுதிச்சடங்கில் மாநிலம் முழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் முன்னாள் முதல்வருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் மோடியும் இன்று சண்டிகர் செல்கிறார்.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் இரங்கல் தெரிவித்ததுடன், மாநிலம் ஒரு உயர்ந்த நபரை இழந்துவிட்டதாகக் கூறினார். பாதலுடனான தனது பல ஆண்டு கால தொடர்பை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, அவரது மறைவு அவருக்கு தனிப்பட்ட இழப்பு என்று கூறினார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “பிரகாஷ் சிங் பாதல் ஜியின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் இந்திய அரசியலின் மகத்தான ஆளுமை மற்றும் நமது தேசத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய குறிப்பிடத்தக்க அரசியல்வாதி ஆவார். அவர் பஞ்சாபின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தார் என பதிவிட்டுள்ளார்

பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாபின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தார் மேலும் 1970களின் பிற்பகுதியில் மத்திய அமைச்சராகவும் இருந்தார். அவரது மறைவிற்கு கட்சி பாகுபாடுகளை கடந்து அரசியல்வாதிகளிடமிருந்து இரங்கல் செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பிரகாஷ் சிங் பாதல் பஞ்சாப் மாநில முதல்வராக பலமுறை பதவி வகித்துள்ளார். 1970-1971, 1977-1980, 1997-2002 மற்றும் 2007-2017 வரை முதல்வராக இருந்தார். பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை பதவி வகித்த இளம் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார். பாதலின் அரசாங்கங்கள் விவசாயிகள் மீது கவனம் செலுத்தின. அதில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவது என்பது ஒரு முக்கிய முடிவு.

2020ல் மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியுடனான உறவை அவரது கட்சி முறித்துக் கொண்டது மட்டுமல்லாமல், 2015ல் அவர் பெற்ற பத்ம விபூஷன் விருதையும் திருப்பிக் கொடுத்தார்.

Tags:    

Similar News