பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சித்து
காங்கிரஸ் தலைமை உத்தரவை ஏற்றுபஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து;
அண்மையில் நடந்து முடிந்த உ.பி., உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு, மாநில தலைவர்களின் பதவியைப் பறிக்க சோனியா காந்தி அதிரடியாக நேற்று முடிவு எடுத்தார்.
இதையடுத்து உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு, உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியால், மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் நமீரக்பம் லோகன்சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, கோவா காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடங்கர் ஆகியோரை பதவியில் இருந்து ராஜினாமா செய்யும்படி உத்தரவிட்டார்.
அதன்படி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து இன்று ராஜினாமா செய்தார். காங்கிரஸ் பதவியில் இருந்து விலகும் தனது கடிதத்தை சோனியா காந்திக்கு சித்து அனுப்பி வைத்துள்ளார்.
உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், கோவா, மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களை தொடர்ந்து நவ்ஜோத் சிங் சித்து சித்து ராஜினாமா செய்துள்ளார்.