விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்
இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.;
பைல் படம்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. சிங்கப்பூரின் டெலியோஸ்-2 மற்றும் லூம்லைட்-4 ஆகிய இரு செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
நேற்று இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில், இன்று மதியம் 2.19 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. முதன்மை செயற்கை கோளான டெலியோஸ்-2, மொத்தம் 741 கிலோ எடை கொண்டது. இது புவி கண்காணிப்புகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. 16 கிலோ எடை கொண்ட சிறிய செயற்கை கோளான லூம்லைட்-4, கடல்சார் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ராக்கெட்டின் நான்காம் நிலை பகுதியில், போயம்-2 என்ற விண்வெளி ஆய்வு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இஸ்ரோ, இந்திய வான்வெளி இயற்பியல் ஆய்வு நிறுவனம் உட்பட 4 நிறுவனங்கள் இணைந்து இந்த சாதனங்களை உருவாக்கி உள்ளன.