டெல்லியில் தேசிய மாணவர் படை பேரணியில் இன்று பிரதமர் உரை
டெல்லி கரியப்பா மைதானத்தில் நடைபெறும் தேசிய மாணவர் படை பிரதமர் பேரணியில் பிரதமர் உரையாற்றுகிறார்.
டெல்லியில் உள்ள கரியப்பா பரேட் மைதானத்தில் இன்று மாலை 4:30 மணிக்கு தநடைபெறும் வருடாந்திர என்.சி.சி பிரதமர் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார்.
இந்த நிகழ்ச்சியில் அமிர்த தலைமுறையின் பங்களிப்பு மற்றும் அதிகாரமளித்தலை வெளிப்படுத்தும் 'அமிர்த காலத்தில் என்.சி.சி' என்ற கருப்பொருளில் கலாச்சார நிகழ்ச்சியும் அடங்கும். வசுதைவ குடும்பகம் என்ற உண்மையான இந்திய உணர்வுடன், 24 வெளிநாடுகளைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் இந்த ஆண்டு பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக, துடிப்பான கிராமங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களும் தேசிய மாணவர் படையின் பிரதமர் பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மரியாதை
தேசியத் தலைநகரில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். நமது நாட்டைத் தன்னலமின்றி பாதுகாத்தவர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிப்போம் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினேன். நமது தேசத்தை தன்னலமின்றி பாதுகாத்தவர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கிறோம். அவர்களின் தைரியமும் தியாகமும் ஒருபோதும் மறக்க முடியாதவை. அவர்களுக்கு மரியாதையுடனும் நன்றியுடனும் தலைவணங்குகிறோம், அவர்களது லட்சியங்களை நிலைநிறுத்துவதாக உறுதியளிக்கிறோம்." என பதிவிட்டுள்ளார்.