பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஜாலியன்வாலா பாக் படுகொலையில் தமது இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், "ஜாலியன்வாலா பாக் படுகொலையில் தமது இன்னுயிரை நீத்த தியாகிகளுக்கு எனது அஞ்சலிகள். அவர்களது துணிவும், தீரமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் வலிமை சேர்க்கின்றன" என்று கூறியுள்ளார்.