பேராசிரியர் பீம் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
பேராசிரியர் பீம் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.;
பேராசிரியர் பீம் சிங்
பேராசிரியர் பீம் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு அடிமட்டத் தலைவராக பேராசிரியர் பீம் சிங் ஜி நினைவுகூரப்படுவார் என்று மோடி கூறினார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"பேராசிரியர் பீம் சிங், ஜம்மு மற்றும் காஷ்மீரின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு அடிமட்டத் தலைவராக நினைவுகூரப்படுவார். அவர் மிகவும் நன்றாகப் படித்து, புலமை பெற்றவர். அவருடனான எனது கலந்துரையாடல்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருப்பேன். அவரது மறைவால் பெரிதும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி." என்று தெரிவித்துள்ளார்.