பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற பிரவீன்குமாருக்கு பிரதமர் வாழ்த்து
பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது டுவிட்டரில்;
பாராலிம்பிக்கில் பிரவீன் குமார் வெள்ளி பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. இந்த பதக்கம் அவரது கடின உழைப்பு மற்றும் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பின் பலனாகும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.