பிரதமர் மோடி வரும் 27 ம் தேதி ஜப்பான் பயணம்
Prime Minister Modi -பிரதமர் மோடி வரும் 27ம் தேதி ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.;
Prime Minister Modi -ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே (வயது 67). கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவரை டெட்சுய யமகாமி என்பவர் சுட்டுக்கொலை செய்தார். இந்த சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் ஷின்சோ அபே நினைவு நிகழ்ச்சி, அந்த நாட்டின் அரசு சார்பில் 27-ம் தேதி டோக்கியோவில் நடத்தப்படுகிறது. இதுகுறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், "அரசு சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துகிற போது, அது ஜப்பான் என்றைக்கும் வன்முறைக்கு அடிபணியாது என்பதை காட்டும். சர்வதேச தலைவர்கள் இரங்கல் தெரிவிக்கவும் வகை செய்யும்" என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேரில் கலந்து கொள்கிறார். இதை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஷின்சோ அபேயின் மறைவுக்கு பிரதமர் மோடி விடுத்த இரங்கல் செய்தியில், தனது அன்பு நண்பர் என்று அவரை குறிப்பிட்டதுடன் அவருடனான நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். பிரதமர் மோடி தனது ஜப்பான் பயணத்தின் போது, அந்த நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசுகிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2