ஆந்திரப்பிரதேசத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் மோடி இரங்கல்
ஆந்திரப்பிரதேசத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
ஆந்திரப்பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
"ஆந்திரப்பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரியில் பேருந்து விபத்து காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதற்காக கவலை அடைந்துள்ளேன். சோகமான இந்த தருணத்தில் எனது எண்ணங்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பற்றியதாக உள்ளன என்று தெரிவித்தார்.