ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ரோசய்யா மறைவிற்குப் பிரதமர் இரங்கல்

Update: 2021-12-04 11:15 GMT

பிரதமர் நரேந்திர மோடி

ஆந்திரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கே. ரோசய்யா மறைவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

" ரோசய்யா மறைவு வருத்தத்தை அளிக்கிறது. நாங்கள் இருவரும் முதலமைச்சராக இருந்தபோதும், பின்னர் அவர் தமிழக ஆளுநராக இருந்தபோதும் அவருடன் பேசியதை நான் நினைவு கூர்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி", என்று பிரதமர் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News