ரம்ஜான் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசுத்தலைவர் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-02 17:19 GMT

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ரம்ஜான் பண்டிகையையொட்டி குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். "ரம்ஜான் பண்டிகையையொட்டி, குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக நமது முஸ்லீம் சகோதர சகோதரிகளுக்கு எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். ரமலான் மாத நிறைவில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, ஏழைகளுக்கு உணவு வழங்குவதும், உணவு தானியம் வழங்குவதும் சிறப்பு அம்சமாக உள்ளது. இந்த விழா இணக்கமான, அமைதியான, வளமான, சமூகத்தைக் கட்டமைப்பதற்கு பாடுபட மக்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. புனிதமான ரம்ஜான் பண்டிகையின்போது மனித குலத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் நலிந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நம்மை அர்ப்பணிக்க உறுதியேற்போம்" என்று குடியரசுத்தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News