குடியரசு தின விழாவில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகை
குடியரசு தின சிறப்பு விருந்தினராக இந்தியா வரும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஜெய்ப்பூர் நகரின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு செல்லவுள்ளார்
டெல்லியில் நாளை வெள்ளிக்கிழமை குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்த ஆண்டு குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வியாழக்கிழமை ஜெய்ப்பூர் வர உள்ளார். அவர் நகரின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியுடன் சாலைக் கண்காட்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக அவர் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். விமானம் மூலம் இன்று மதியம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு வரும் மேக்ரான், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். முன்னதாக அவர் மோடியுடன் சாலை பேரணியிலும் பங்கேற்கிறார்.
இது தவிர ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டை, ஜந்தர் மந்தர் மற்றும் ஹாவா மகால் ஆகிய இடங்களுக்கு மேக்ரான் செல்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய சின்னமான ஜந்தர் மந்தருக்கு செல்லும் அவர் , அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். பிரெஞ்சுக்காரர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் இரு தலைவர்களும் சுற்றிப்பார்க்கிறார்கள். ஜந்தர் மந்தர் உலகின் மிகப்பெரிய கண்காணிப்பு நிலையம் மற்றும் உலகின் மிகப்பெரிய கல் சூரிய கடிகாரம் உள்ளது.
பின்னர் இரவு 8.50 மணியளவில் டெல்லிக்கு புறப்பட்டு செல்லும் மேக்ரான் நாளை டெல்லி கடைமை பாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழு பங்கேற்க உள்ளது.
2016 இல் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டே, 2008 இல் நிக்கோலஸ் சர்கோசி, 1998 இல் ஜாக் சிராக், 1980 இல் வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் மற்றும் ஜாக் சிராக் பிரதமர் ஆகியோருக்குப் பிறகு இந்தியாவின் குடியரசு தினத்தில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற ஆறாவது பிரெஞ்சு தலைவர் (ஐந்தாவது ஜனாதிபதி) மக்ரோன் ஆவார். 1976.
அணிவகுப்புக்குப் பிறகு, மக்ரோன் பிரெஞ்சு தூதரகத்திற்குச் சென்று அங்குள்ள ஊழியர்களுடன் உரையாடுவார். மாலையில், அவர் ராஷ்டிரபதி பவனில் 'அட் ஹோம்' விழாவிற்கு வருவார்,