இந்தியா நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது -குடியரசுத்தலைவர் கோவிந்த்

இந்தியா நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்டது, நமது பாரம்பரியத்துடன் நாம் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த வேண்டும்: குடியரசுத்தலைவர் கோவிந்த்;

Update: 2022-04-19 01:51 GMT

குடியரசுத்தலைவர் கோவிந்த்

இந்தியா, நீண்ட நெடிய 'வாத – விவாத' மற்றும் உரையாடும் பாரம்பரியத்தைக் கொண்டது. நமது பாரம்பரியத்துடன் நாம் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் இந்தியா சர்வதேச மையத்தின் வைர விழாக் கொண்டாட்டத்தில் நேற்று பேசிய அவர், 'தர்ஷன்' என்றழைக்கப்படும் இந்தியாவின் பண்டைக்கால தத்துவம், உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படுவதைவிட மிகச் சிறந்த தத்துவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார். இந்திய மக்கள் குறிப்பாக இளைஞர்கள், அதிக அளவில் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் இருப்பதாக கூறிய அவர், உண்மையை நிலைநாட்ட சம்பவங்களின் அடிப்படையில் மட்டுமின்றி, தீவிர சிந்தனையும் அவசியம் என்றார்.

சர்வதேச அளவில் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு மையமாக இந்தியா சர்வதேச மையத்தை ஏற்படுத்த 1958-ஆம் ஆண்டு சிந்தித்த போது, இரண்டு உலகப் போர்களால் ஏற்பட்ட சுமைகளுக்கு பிறகு, நியாயமான மற்றும் நிலைத்தன்மை கொண்ட சர்வதேச நடைமுறைகளைக் கொண்டதாக உலகம் இருந்தது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

Tags:    

Similar News