டிரோன் பார்சல் சர்வீஸ் : அசத்தும் இந்திய அஞ்சல்துறை

இந்திய அஞ்சல் துறையானது, ஆளில்லா டிரோன்கள் மூலம் பார்சலை உரியவருக்கு வினியோகம் செய்து அசத்தியுள்ளது.

Update: 2022-05-30 03:30 GMT

பார்சலுடன் வந்த டிரோன் 

இந்திய அஞ்சல் துறை, நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் தனது சேவைகளை வழங்கி வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், அஞ்சல் துறையின் தேவைகள் வெகுவாக குறையத் தொடங்கின. குறிப்பாக கடிதம், தந்தி சேவை வெகுவாக குறைந்துவிட்டது.

எனினும், தனது சேவைகளை புதுப்பித்து கொள்வதிலும், காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளவும் இந்திய அஞ்சல்த்துறை ஒருபோதும் தவறியதில்லை. அவ்வகையில், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில், டிரோன்கள் வாயிலாக பார்சல்களை அனுப்பும் திட்டத்தை, பரிச்சார்த்த முறையில் இந்திய அஞ்சல் துறை மேற்கொண்டுள்ளது.

அதன்படி குஜராத் மாநிலத்தின் புஜ் வட்டம், ஹபே கிராமத்தில் இருந்து, கட்ச் மாவட்டம் நேர் எனும் கிராமத்திற்கு, டிரோன் மூலம் பார்சல் அனுப்பப்பட்டது. இரு கிராமங்களுக்கும் இடையே உள்ள தொலைவு, சுமார் 46 கிலோ மீட்டர் என்ற நிலையில், வெறும் 25 நிமிடங்களில் கடந்து, பார்சலை ட்ரோன் வினியோகம் செய்ததாக, அஞ்சல்துறையினர் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News