எல்லை பாதுகாப்புப்படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

இமாச்சல் பிரதேசத்தில் எல்லை பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

Update: 2023-11-12 07:26 GMT

எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் உரையாடும் பிரதமர் மோடி 

இன்று  தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எல்லை பாதுகாப்புப்படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

2014 இல் பதவியேற்றதிலிருந்து, ஆயுதப் படைகளுடன் தீபத் திருவிழாவைக் கழிப்பதையும், அவர்களின் தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்க தொலைதூர இடங்களுக்குச் செல்வதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபத் திருவிழாவை கொண்டாடினார்

 அதேவேளை, 2019ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் ரஜோரியில் எல்லை பாதுகாப்புப்படையினருடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 

பிரதமர் நரேந்திர மோடி தனது பாரம்பரியத்தை கடைபிடித்து இந்த ஆண்டு தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதற்காக சீன எல்லையை ஒட்டியுள்ள இமாச்சல பிரதேசத்தில் உள்ள லெப்சாவுக்கு சென்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை தொலைதூர கிராமத்தை அடைந்த பிரதமர் மோடி, "நமது துணிச்சலான பாதுகாப்புப் படைகளுடன் தீபாவளியைக் கொண்டாட ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள லெப்சாவை அடைந்தேன்" என்று X இல் எழுதினார்.

இந்த ஆண்டு இமாச்சலபிரதேசத்தில் சீனாவுடனான எல்லை பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்.

இமாச்சல பிரதேசத்தின் லிப்ஷா பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி சீனாவுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம், இந்தோ-தீபெத் எல்லை காவல் படையினருடன் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகிறார்.

முன்னதாக, பிரதமர் மோடி தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில், "அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இந்த சிறப்புப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தைக் கொண்டு வரட்டும்" என்று அவர் கூறினார். 

Tags:    

Similar News