உலகின் மிகப் பெரிய தேசியக் கொடியை பறக்க விட்டு மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி
விழா காலங்களில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்.;
மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்துவதற்காக லடாக்கில் உள்ள லே பகுதியில் உலகின் மிகப் பெரிய அளவிலான காதி தேசியக் கொடியை (225 அடி நீளமும், 150 அடி அகலமும்) பறக்க விட்ட காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
"காதி மீது விரிவான ஆர்வம் கொண்டிருந்த மதிப்புக்குரிய பாபுவுக்கு ஒப்பற்ற புகழஞ்சலியாக இது உள்ளது.
இந்த விழாக்காலம் காதி மற்றும் கைவினைப் பொருட்களை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும், தற்சார்பு இந்தியாவை கட்டமைக்கும் தீர்மானத்தை வலுப்படுத்துவதாகவும் அமைய வேண்டும்" என்று டுவிட்டரில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.