மணிப்பூர் முதலமைச்சராகப் பதவியேற்ற பிரேன்சிங்: வாழ்த்துத் தெரிவித்தார் பிரதமர் மோடி
மணிப்பூர் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள பிரேன் சிங்குக்கு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.;
இந்திய பிரதமர் நரேந்திர மோடி
மணிப்பூர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள என்.பிரேன் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மணிப்பூர் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள பிரேன் சிங்குக்கு, வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். அவரும், அவருடைய அமைச்சரவைச் சகாக்களும் மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்ற சிறந்த பணிகள் தொடரும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.