மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு
நாளை நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.;
புதுதில்லி விஞ்ஞான்பவனில் 2022 ஏப்ரல் 30 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள முதலமைச்சர்கள் மற்றும் உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுவார்.
எளிமையாகவும், வசதியாகவும் நீதி வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கும், நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்கும், நிர்வாகத்துறையையும், நீதித்துறையையும் ஒருங்கிணைப்பதற்கான நிகழ்வாக இந்த கூட்டு மாநாடு நடைபெறுகிறது. இதற்கு முன் இத்தகைய மாநாடு 2016-ல் நடைபெற்றது. இதையடுத்து இ-நீதிமன்றங்கள், முறையிலான திட்டத்தின் கீழ், நீதிமன்ற நடைமுறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.