காந்தியவாதி சகுந்தலா சௌத்ரி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
பிரபல காந்தியவாதி சகுந்தலா சௌத்ரியின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்;
இந்திய பிரதமர் நரேந்திர மோடி
பிரபல காந்தியவாதி சகுந்தலா சௌத்ரி அவர்களின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
"காந்திய மாண்புகளைப் பரப்புவதில் வாழ்நாள் முழுவதுமான செயல்களுக்காக சகுந்தலா சௌத்ரி அவர்கள் நினைவுகூரப்படுவார். சரனியா ஆசிரமத்தில் அவரது தலை சிறந்தப் பணி பலரது வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும், எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி." என்று தெரிவித்துள்ளார்.