மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்திய பிரதமர்

Update: 2021-10-02 05:58 GMT

மகாத்மா காந்தி பிறந்தநாளில் அவருக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;

தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்தநாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துகிறேன். பெருமதிப்பிற்குரிய பாபுஜியின் வாழ்க்கை மற்றும் லட்சியங்கள், கடமையை பின்பற்றி நடப்பதற்கு நாட்டின் அனைத்து தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

காந்தி ஜெயந்தி தினத்தில் பாபுஜிக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். அவரது உன்னத கொள்கைகள் உலகளவில் இப்போதும் தேவைப்படுவதுடன் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமை அளிப்பதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News