இடிதாங்கி மீது விமானம் மோதல் : அதிஷ்டவசமாக பயணிகள் தப்பித்தனர்
இடிதாங்கி மீது விமானம் மோதிய நிலையில் அதிர்ஷ்டவசமாகப் பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.;
இன்று மாலை ஸ்பைஸ் ஜெட் விமானம் ஓன்று டெல்லியிலிருந்து ஜம்முவுக்கு புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானத்தை அதன் ஓடுபாதையில் சரியான முறையில் நிறுத்த வாகனம் ஒன்றின் மூலம் விமானம் இழுத்து வரப்பட்டது.
அந்தசமயம் எதிர்பாராத விதமாக அங்கிருந்த இடிதாங்கி கம்பத்தின் மீது விமானம் மோதியது. இதில் விமானத்தின் இறக்கைகள் சிறிய அளவில் சேதமானது. இதையடுத்து பழுதடைந்த விமானத்தை சரிசெய்ய வேறு இடத்திற்கு அந்த விமானம் கொண்டு செல்லப்பட்டது. மேலும் அந்த விமானத்தில் செல்ல இருந்த பணிகள் மாற்று விமானத்தில் ஜம்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதிஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு, சேதம் இல்லை. இந்த விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.