பாராதீப் துறைமுகத் (பிபிடி) தலைவராக பி.எல்.ஹரநாத் பொறுப்பேற்பு

பாராதீப் துறைமுகத் (பிபிடி) தலைவராக பி.எல்.ஹரநாத் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

Update: 2021-10-08 08:28 GMT

 பாராதீப் துறைமுகக் கழகத் (பிபிடி) தலைவராக பொறுப்பேற்ற பி.எல்.ஹரநாத்.

ஒடிசா மாநில பாராதீப் துறைமுகக் கழகத் (பிபிடி) தலைவராக பி.எல்.ஹரநாத் இன்று பொறுப்பேற்றார். 1994ம் ஆண்டு பிரிவு ஐஆர்டிஎஸ் அதிகாரியான அவர் எம்எஸ்சி பட்டம் பெற்றவர். பூசா, புது தில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிஎச்டி பட்டம் பெற்றார். தனது 27 வருட பணிக்காலத்தின் போது, அவர் இந்திய ரயில்வேயில் 22 ஆண்டுகளும் கப்பல் அமைச்சகத்தில் 5 ஆண்டுகளும் பணியாற்றினார்.

சிறந்த பல பணிகளை அங்கீகரிக்கும் வகையில், 2002 மற்றும் 2005 இல் ரயில்வே அமைச்சகத்திலிருந்து சிறந்த நிர்வாகத்திற்காக தேசிய விருது பெற்றார்.

அவர் 2015-2020 வரை விசாகப்பட்டினம் துறைமுகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். நிலக்கரி, கொள்கலன்கள் போன்ற சரக்குகளை ஈர்ப்பதற்காக வாடிக்கையாளர்களுக்கு மொத்த போக்குவரத்துத் தீர்வுகள் போன்ற புதுமையான சந்தைப்படுத்தல் தீர்வுகளை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

அவரது பதவிக்காலத்தில், விசாகப்பட்டினம் துறைமுகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவர் பங்களித்தார். விசாகப்பட்டினம் துறைமுகம் முக்கிய துறைமுகங்களில் 3வது இடத்திற்கு உயர்ந்தது.

Tags:    

Similar News