33-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.;

Update: 2022-05-09 02:45 GMT

சென்னையில் இன்று 33-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை.அதன்படி,பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.105.41 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.96.67 ஆகவும் உள்ளது.

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.120.51 ஆகவும், டீசல் ரூ.104.77 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.115.12 ஆகவும், டீசல் ரூ.99.83 ஆகவும் மாற்றமின்றி அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 110 டாலருக்கும் குறைவாக இருக்கும் வரை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்காது என மத்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறியிருந்தார். தற்போது உலக சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 112 டாலராக இருப்பதால்,பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

Tags:    

Similar News