பெட்ரோல் நிலையங்களில் இன்று கொள்முதல் நிறுத்தப் போராட்டம்

கலால் வரி குறைப்பால் சில்லறை விற்பனையில் பாதிப்பு என்று கூறி, பெட்ரோல், டீசலை இன்று ஒருநாள் கொள்முதல் செய்யாமல், பெட்ரோலிய விற்பனை முகவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-05-31 03:45 GMT

மத்திய அரசு, கடந்த 21ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதை தொடர்ந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 9.50 காசுகளும், டீசல் விலை 7 ரூபாயும் குறைக்கப்பட்டன. இதையடுத்து, சென்னையில் லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளும், டீசல் விலை ரூ.94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் சில்லறை விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, பெட்ரோலிய முகவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதை அரசுக்கு உணர்த்தும் வகையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 23 மாநிலங்களில் இன்று பெட்ரோல், டீசலை ஒருநாள் கொள்முதல் செய்யமால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலால் வரி குறைப்பால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட வேண்டுமென்று டீலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இன்று அடையாள கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் 5 ஆயிரத்து 800 டீலர்கள் பெட்ரோல், டீசலை கொள்முதல் செய்யவில்லை; எனினும், வாகன ஓட்டிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News