உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்: ஹெலிகாப்டர் பிளேடுகள் தாக்கி அரசு அதிகாரி உயிரிழப்பு
உத்தரகாண்ட் அரசு அதிகார் ஜிதேந்திர குமார் சைனி செல்ஃபி எடுக்க முயன்றபோது ஹெலிகாப்டரின் பிளேடுகள் தாக்கி உயிரிழந்தார்;
மாதிரி படம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத்தில் ஹெலிகாப்டருக்கு வெளியே செல்ஃபி எடுக்க முயன்ற அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். ஜிதேந்திர குமார் சைனி என்ற அந்த அதிகாரி உத்தரகாண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையத்தின் நிதிக் கட்டுப்பாட்டாளராக இருந்தார்.
கேதார்நாத் தாமில் உள்ள ஹெலிபேடில் இந்த விபத்து நடந்துள்ளது. செல்ஃபி எடுக்க முயன்றபோது ஹெலிகாப்டரின் டெயில் ரோட்டர் பிளேட்டின் எல்லைக்குள் சைனி வந்தார். அப்போது ஹெலிகாப்டர் இறக்கை தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரியின் நுழைவாயில்கள் அட்சய திருதியை அன்று யாத்ரீகர்களுக்காக திறக்கப்பட்டு சார் தாம் யாத்திரை தொடங்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்தது .
யாத்திரைக்கு ஏற்கனவே 16 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பதிவு செய்துள்ளனர், மேலும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், கேதார்நாத் ஏப்ரல் 25 ஆம் தேதியும், பத்ரிநாத் ஏப்ரல் 27 ஆம் தேதியும் திறக்கப்படும்.