நடுவானில் பயணிகள் இருக்கை பகுதியில் புகை மூட்டம்: விமானம் பத்திரமாக தரையிறக்கம்..!
Flight Emergency Landing - நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணிகள் இருக்கை பகுதியில் புகை மூட்டம் சூழ்ந்தது. இதனால் அனைவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் பத்திரமாக விமானம் தரை இறக்கப்பட்டது.;
Flight Emergency Landing -தலைநகர் டில்லியில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் கிளம்பியது. இன்று காலை 6:15 மணிக்கு ஜபல்பூருக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில் 5,000 அடி உயரத்தில் விமானம் பறந்த நிலையில், விமானத்தின் கேபினில் இருந்து திடீரென புகை வந்தது. இதன் காரணமாக பயணிகள் மூச்சுவிடுவதில் பெரிதும் சிரமப்பட்டனர். இதனால் அதிர்ச்சியில் அனைவரும் புகார் செய்தனர்.
இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் காலை 7:00 மணிக்கு பாதுகாப்பாக டில்லி விமான நிலையத்துக்கே திரும்பியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் விமானத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, விமானத்தின் கேபினில் இருந்து புகை வந்ததற்கு காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2