நாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்பு மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்பு மசோதா நிறைவேறியது.

Update: 2023-12-21 16:11 GMT

பைல் படம்

நாடாளுமன்றத்தில் தொலைத்தொடர்பு மசோதா நிறைவேறியது. இந்த மசோதா உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் (KYC) என்ற கடுமையான விதிமுறைகளுடன் வாடிக்கையாளர்களப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

சிம் பாக்ஸ் போன்றவற்றின் மூலம் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

வேறொருவரின் அடையாளச் சான்றைப் பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

மாநில அரசு தலைமையிலான சர்ச்சைத் தீர்வுக் கட்டமைப்பு. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி உரிமைப் பிரச்சனைகளைத் தீர்மானிப்பார்கள்.

தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு, பொதுச் சொத்தாக இருந்தால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனுமதி வழங்க வேண்டும்.

தனியார் சொத்தாக இருந்தால், உரிமையாளருக்கும், தொலைத் தொடர்பு கட்டமைப்பை நிறுவும் நபருக்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் நாளை சென்னை வருகை

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நாளை (டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அகுர்சந்த் மன்முல் ஜெயின் கல்லூரியில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் எனது இளயபாரதம் குறித்து கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

இதனைத்தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு இந்தக் கல்லூரி வளாகத்தில் ‘நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம்’ யாத்திரையின் நகர்ப்புறப் பிரச்சார வாகனத்தை அவர் கொடியசைத்துத் தொடங்கிவைப்பார்.

பின்னர் சென்னை கலைவாணர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்வில் திரு அனுராக் சிங் தாக்கூர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, அதிகாரபூர்வ இலச்சினை, உடை, சின்னம், சுடர், கருப்பொருள் பாடல் ஆகியவற்றை வெளியிடுகிறார்.

இந்தத் தொடக்க விழாவில், தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் மாநில அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, பேட்மிண்டன் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, ஹாக்கி ஆசியக் கோப்பையில் வெண்கலப் பதக்கம் வென்ற எஸ்.மாரீஸ்வரன் உள்ளிட்ட புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.

கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டின் 6 -வது பதிப்பு 2024 ஜனவரி 19 முதல் 31 வரை தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 நகரங்களில் நடைபெற உள்ளது.

இளைஞர் விளையாட்டுகளின் முந்தைய 5 பதிப்புகள் ஏற்கனவே தில்லி, புனே, குவகாத்தி, பஞ்ச்குலா மற்றும் போபாலில் நடத்தப்பட்டன.

Tags:    

Similar News