விதிமுறைகளை மீறி பாராகிளைடிங் பயிற்சி: பயிற்சியாளர் உட்பட 3பேர் கைது

Paragliding Meaning in Tamil-திருவனந்தபுரம் அருகே பாராகிளைடிங் செய்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் பயிற்சியாளர் உட்பட 3 பேரை கேரள போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-08 13:00 GMT

பைல் படம்.

Paragliding Meaning in Tamil-கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா கடற்கரை பகுதியில் பாராகிளைடிங் செய்து கொண்டிருந்த கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த பார்வதி மற்றும் அவரது பயிற்சியாளரான உத்திராகண்ட் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் என்பவரும் காற்றின் திசை மாறியாதால் அங்கு பாதி முடிக்கப்பட்ட நிலையில் இருந்த 50 அடி உயர மின்கம்பத்தில் சிக்கினர்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் மின்கம்பத்தின் கீழ் பகுதியில் வலைகளை விரித்து அவர்கள் விழுந்தால் கூட அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இருவரும் அந்த வலையில் விழுந்து சிறுசிறு காயங்களுடன் உயர் தப்பியுள்ளனர்.

விபத்து குறித்து அவர்கள் கூறுகையில் தங்களது பாராகிளைடர் மோட்டார் வகையை சார்ந்ததல்ல, கைகளால் இயக்கும் வகையை சார்ந்தது. காற்றின் திசை திடீரென மாறுபட்டதால் தாங்கள் இந்த மின் கம்பத்தில் சிக்கியதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வர்க்கலா காவல் நிலைய போலீசார் நகராட்சி விதிமுறைகளை மீறப்பட்டதாகவும், பார்வதி உயரத்தில் பறக்கிறது என கூச்சல் போட்ட பிறகும் ஆய்வாளர் அதை தடுக்க முயற்சி மேற்கொள்ளவில்லை, விதிமுறைகளை மீறி உயரே பறந்துள்ளனர்.

எனவே கொலை முயற்சி வழக்காக்கவும் பதிவு செய்த போலீசார் நிறுவன உரிமையாளர்கள் ஆகாஷ், ஜெனிஷ் ஆகியோரை தேடி வரும் நிலையில் பயிற்சியாளர்கள் பிரபு தேவா, ஸ்ரேயஸ், ஆய்வாளர் சந்தீப் ஆகியோரை கைது செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News